பங்குச்சந்தை நேற்று படு வீழ்ச்சி அடைந்தது என்பதும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் சரிந்தது என்பது குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவிலிருந்து வரும் நிலையில் இன்று சற்றே உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும் சென்செக்ஸ் 60,000க்கும் குறைவாக வர்த்தகமாகி வருவதால் மேலும் குறையும் என்பதையே காட்டுவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்களும் ஏற்கனவே முதலீடு செய்தவர்களும் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பங்கு சந்தை ஒரு நிலையான நிலைக்கு வரும் வரையில் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறித்து தற்போது பார்ப்போம்
இன்று காலை தொடங்கியதில் இருந்து 200 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 950 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை ஆண்டு 63 புள்ளிகள் உயர்ந்து 17610 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் பங்கு சந்தை உயருமா அல்லது சரியுமா என்பதை இப்போது தெரிந்து பார்ப்போம் தூத்துக்குடியில்