பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:48 IST)
பங்குச்சந்தை கடந்து சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 61,240 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 18,019 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்றும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் இனிவரும் நாட்களில் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதானி விவகாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்