இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்ததை அடுத்து, அதற்கு முந்தைய வாரம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கடந்த வாரம் நல்ல லாபம் கிடைத்ததாக முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மிகக் குறைந்த சரிவு என்பதால் மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், 155 புள்ளிகள் சரிந்து 79,750 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில், தேசிய பங்குச்சந்தை நிப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 24,013 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், HDFC வங்கி, இந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்டு வங்கி, ITC, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva