இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதுமே சரிவில் இருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் சரிவில் வர்த்தகம் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே 330 புள்ளிகள் சரிந்து, 77,102 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 105 புள்ளிகள் குறைந்து, 23,330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஸ்டீல், டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.