இந்தியாவில் தங்க இறக்குமதி குறைவு – காரணம் என்ன ?

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (09:24 IST)
உலகளவில் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறக்குமதி வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 762 மெட்ரிக் டன்களாகும். இது 2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 20% குறைவு என்று  தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்ந்த  10 ஆண்டுகளில் இவ்வளவு குறைவாக தங்கம்  இறக்குமதி செய்யப்பட்டதில்லை.

இந்த இறக்குமதிக் குறைவிற்குக் காரணமாக இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் தங்கம் வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதும் கூறப்படுகிறது. மேலும் பணப்புழக்கம் குறிந்துள்ளதாலும், தங்கம் வாங்குவதற்கு அரசு நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் ஆகியவையும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலைதான் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும் நீடிக்குமா அல்லது தங்கம் இறக்குமதி அதிகமாகுமா என்றக் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்