இந்தியா ’ சில்னெஸ் ’ அமெரிக்கா வரை வீசுது : விஜயகாந்த் கூல் டுவிட்

திங்கள், 7 ஜனவரி 2019 (16:34 IST)
தமிழகத்தில் இருபெரும் ஆளுமைகளாக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக கோலோச்சிக் கொண்டிருந்தபோது தனிக்கட்சி துவங்கி முக்கிய குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராக விளங்கியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சில நாட்களுக்கு முன் தன் மனைவி பிரேமலதாவுடன் ,சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்நிலையில் கிருஸ்துமஸ் தின விழாவில் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
 
இதனையடுத்து விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருப்பதாவது:
 
’அன்னை மண்ணில் வராலாறு காணாத குளிர் என்று கேள்விப்படும்போது அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.’
இதனால் தங்கள் தலைவன் மீண்டு பழையபடி வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்