ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (12:36 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் ஏறிய நிலையில் இன்று திடீரென ஒரு  கிராமுக்கு 30 ரூபாய் இறங்கி உள்ளது. அதேபோல் ஒரு சவரனுக்கு 240 இறங்கி உள்ள நிலையில் இந்த வாரம் இன்னும் விலை இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து  ரூபாய்   8,020 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 240 குறைந்து  ரூபாய்  64,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,749  எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,992 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்