ஒரே நாளில் சரிந்தது முட்டை விலை - அதிருப்தியில் கோழிப் பண்ணையாளர்கள்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:25 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தொழிலதிபர்கள் முதல் ரோட்டுக்கடை விற்பனையாளர்கள் வரை வியாபாரிகள் எல்லோரும் பாதிக்கப்பட்டு நட்டத்தை சந்தித்து வருகின்றனர். 

அதனால் சந்தையில் பொருட்களின் உற்பத்தி விலையை விட விற்கும் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்