அமேதியில் ராகுல் பின்னடைவு: ஸ்மிரிதி இரானி முன்னிலை

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:48 IST)
காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கூறப்பட்ட அமேதி தொகுதியில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இருந்தாலும் சற்றுமுன் வெளியான தகவலின்படி ராகுல்காந்தி பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி முன்னிலை வகிக்கின்றார்.
 
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என பாரம்பரியமாக காங்கிரஸ் வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின்னடைவாக இருப்பது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இருப்பினும் ராகுல்காந்தி போட்டியிடும் இன்னொரு தொகுதியான வயநாடு தொகுதியில் அவர் முன்னிலை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கத்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்