அதிமுக பணப்பட்டுவாடா...! பரபரப்பு வீடியோ...! நடவடிக்கை பாயுமா..?

Senthil Velan
வியாழன், 28 மார்ச் 2024 (15:43 IST)
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு இடையே அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் இணைந்து கிராமம் கிராமமாக அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். அப்போது அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் பெண்களை வரிசையில் நிற்க வைத்து தலா ரூ.100 வீதம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. 

ALSO READ: சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழக வருகை..!!

தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா ரூ.100 வீதம் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளை மற்ற கட்சி வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்