ஒரு முறைகூட அதிமுக வெற்றி பெறாத தொகுதி இதுதான்!

Sinoj

புதன், 27 மார்ச் 2024 (19:06 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம்  உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமர் மக்களவை தொகுதியில் ஒருமுறை பாஜக வெற்றி பெறுகிறது. மறுமுறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறைகூட அதிமுக வேட்பாளர் வெற்றி பெறவில்லை எனவே இம்முறை அதிகமுவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.
 
மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது திமுக என்று குற்றம்சாட்டினார்.
 
மேலும்,  நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை திமுக ஏமாற்றியுள்ளது.  தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள் ஆனால் குறைக்கவில்லை. மக்களவை ஸ்தாபிக்கும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நமது அதிமுக வேட்பாளர் குரல் கொடுப்பார் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்