விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது- எடப்பாடி பழனிசாமி

Sinoj

புதன், 27 மார்ச் 2024 (20:48 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  தற்போது தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள  நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டி விமர்சித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக, தேமுதிக , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி வாக்குகள் சேகரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இன்று  கன்னியாகுமரி தேர்தல் பரப்புரை கூட்டத்தில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
 
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக. நீட் தடுத்து நிறுத்த போராடுவது அதிமுக. திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவரவில்லை . அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாமைக் கல்லூரி என பல கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும், மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைகளுக்கு கூட வரிவிதிப்பு என அனைத்திற்கும் வரிபோடும் அரசாக திமுக அரசு உள்ளது .தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக கூறினர். ஆனால் குறைக்கவில்லை. என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம்கூட திமுக நிறைவேற்றவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது. மக்களவை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நமது அதிமுக வேட்பாளர் குரல் கொடுப்பார் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்