களமிறங்கிய பாஜக வேட்பாளர்.! ராதிகாவுக்கு ஷாக்..! விருதுநகரில் உட்கட்சி பூசல்..!!

Senthil Velan
புதன், 27 மார்ச் 2024 (16:00 IST)
விருதுநகரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக அக்கட்சியின் நிர்வாகியே போட்டியிடுவதால் பரபரப்பு நிலவி வருகிறது. 
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் விருப்ப மனு கொடுத்திருந்தார். பாஜக வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே விருதுநகரில் தான் போட்டியிடுவதாக வேதா பிரச்சாரமும் செய்து வந்தார். அண்மையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைக்கப்பட்டதால் ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான வேதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் வேதா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ALSO READ: வேட்பு மனு தாக்கல் நிறைவு..! மார்ச் 28-ல் மனுக்கள் மீது பரிசீலினை..!!
 
டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் போட்டியிடுவதாக திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவரான வேதா விளக்கம் அளித்தார். விருதுநகரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக அக்கட்சியின் நிர்வாகியே போட்டியிடுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்