அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முதற்கட்ட பட்டியல் விவரம் இதோ..!!

Senthil Velan
புதன், 20 மார்ச் 2024 (10:32 IST)
மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். 
 
வேட்பாளர்கள் பட்டியல்:

சென்னை வடக்கு தொகுதியில் ராயபுரம் மனோ, சென்னை தெற்கு தொகுதியில் ஜெயவர்த்தன், மதுரை தொகுதியில் டாக்டர் சரவணன், அரக்கோணம் தொகுதியில் ஏ.என் விஜயன், கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயபிரகாஷ், ஆரணி தொகுதியில் கஜேந்திரன், விழுப்புரம் தொகுதியில் பாக்யராஜ், சேலம் தொகுதியில் விக்னேஷ், நாமக்கல் தொகுதியில்
தமிழ் ராமநாதபுரம் ஜெயமணி, ஈரோடு தொகுதியில் அசோக்குமார், கரூர் தொகுதியில் தங்கவேல்,?சிதம்பரம் தொகுதியில் (தனி)  சந்திரகாசன், தேனி தொகுதியில் நாராயணசாமி,  நாகை தொகுதியில் (தனி) சங்கர், காஞ்சிபுரம் தொகுதியில் ராஜசேகர்,  ராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
 
திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை:
 
வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் திமுகவின் மூன்றாண்டுகள் ஆட்சியில், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் புதிய திட்டங்கள் எதையும் திமுக கொண்டு வரவில்லை என்றும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி புகார் தெரிவித்தார்.
 
குரல் கொடுக்காத திமுக எம்பிக்கள்:
 
திமுக கூட்டணியில் 38 எம்பிக்கள் இருந்தும், தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை என்றும் வருகிற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்தால், எங்கள் எம்பிகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ALSO READ: நிறம் மாற்றும் முடிவை கைவிட்ட ZOMATO..! எதிர்ப்புக்கு பணிந்தது..!
 
கடந்த தேர்தலில் கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து மக்களை  ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வருகிற மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்