டாஸ்மாக்குக்கு 4 நாட்கள் லீவ் – தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு !

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (08:30 IST)
வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட பார்களை மூட வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணிநேரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஆகிய நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் மே 23 அன்றும் டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்கள என அனைத்தும் மூடப்படவேண்டுமென தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்