உடனே மதுவை ஸ்டாப் பண்ணா நரம்பு தளர்ச்சி வரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

புதன், 20 மார்ச் 2019 (11:45 IST)
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் குறைந்தபட்சம் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து கொண்டே வரவேண்டும் என்று அரசியல் கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதற்கு காரணம் குடிமகன்களின் உடல்நலன் கருதியே என்ற வித்தியாசமான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'மதுவை தொடர்ந்து குடித்து வருபவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்றும், குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டங்களுடன் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்