தேவர் சிலைக்கு மாலை – மதுரை வேட்பாளர் சு வெங்கடேசன் மீது வழக்கு !

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (12:25 IST)
தேர்தல் விதிகளை மீறி மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறி சு வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மதுரைத் தொகுதியில் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள எழுத்தாளரான சு வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிகளில் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஆனால் மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் விதிமுறைகளை மீறி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது. பறக்கும் படை அதிகாரியான வட்டாட்சியர் தங்கமீனா என்பவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது புகார் அளித்துள்ளார்.  இதனடிப்படையில் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்