பாலிவுட் படங்களுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? ஒரு சிறப்புக் கட்டுரை

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (00:06 IST)
இந்திய சினிமா என்றாலே இந்தியாவைத் தாண்டியுள்ள மற்ற நாட்டினர்க்கு, பாலிவுட் சினிமா என்பதுதான் ஞாபகம் வரும். அந்தளவுக்கு இந்தியாவில், அதுவும் மும்பையில் உருவாகும் இந்தி சினிமாக்களுக்கு உலகளவில் பெருமதிப்பு இருந்தது. அதற்கு அவர்களின் பெரும்பட்ஜெட்களுடன், அவர்கள் எடுக்கும் படங்களின் மையக்கருத்துகளும் பெருபாலானோரை கவர்ந்திழுக்குபடி இருக்கும். ஷாலே போன்ற மாஸ் படங்களுகளின்  வருகைக்குப் பிறகு  இந்தப் படங்களில் மதிப்பு உச்சகட்டத்தை அடைந்தது.

இதையடுத்து, அக்ரோச  நாயகன் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகக் காலத்தில் இருந்து, சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபோதிலும், அமிதாப்பின் ஒவ்வவொரு படங்களும் வசூலில் சாதனை படைத்ததுபோல் மற்ற பிராந்திர மொழிகளில் ரஜினி போன்ற நடிகர்களுக்கும் அமிதாப் ரோல்மாடலாக உருவாகினார்.

தமிழ் நாட்டில், எம்.ஜி.ஆர் , சிவாஜி கோலோட்சிய காலத்திற்குப் பின், கமல், கமல் வளரும் நட்சத்திரங்களாக உருவாகினர்.

அதேபோல், தெலுங்கு சினிமாவில், என்.டி.ஆரின் ஆட்சி கோலோட்சிய பின் அடுத்தக்கட்ட நடிகர்களாக சிரஞ்சீவி, நாகார்ஜூனா உள்ளிட்ட நடிகர்கள் உருவாகினர். கன்னடத்தில், சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவர் சமகாலத்தில் இருந்த   நடிகர்களுக்குப் பின், மோகன் பாபு உள்ளிட்ட நடிகர்கள் கோலோட்சினர்.


தற்போது, பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அமிதாப், சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டாலும், தொலைக்காட்சிகள் கோடிக்கணக்கானோரின் மனதைக் கவர்ந்த, குரோர்பதி நிகழ்ச்சியின் இன்னும் ரசிகர்களைக் கவர்ந்துகொண்டிருக்கிறார். அதற்கு அவர், சர்ச்சையில்சிக்காமல் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

இவருக்கு அடுத்து, சினிமாவில் நுழைந்த சால்மான் கான், அமீர்கான், ஷாருக்கான் இந்த 3 பேரின் படங்களும் 90 காலக்கட்டத்தில் தொடங்கி,  சமீப காலம் வரை பெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் இந்த 3 கான்களின் படங்கள் பெரும் வெற்றிபெற்று, வசூல் சாதனைப்படைத்தது.  ஆனால், சமீபத்தில் அவர்கள் படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. அவர்களுக்கு எதிராக boycott என்று நெட்டிசன்கள் வரிந்துகட்டிக்கொண்டு, இவர்களின் படங்களுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து, எதிர்ப்பு காட்டினர்.


இந்த 3 சூப்பர் ஸ்டார்களின் படங்களும் ஓஹோ என கொண்டாடப்பட்ட நிலையில், சமீப காலத்தில், அவர்களின் படங்களின் ஏன் வரவேற்பு பெறவில்லை?

அமீர்கான் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை ; அதனால் வெளி நாடு போகப் போவததாகத் தன் முன்னாள் மனைவி தன்னிடம் கூறியதாகக் கூறினார். இவர்தான் சில காலக்கட்டத்திற்கு முன், சத்ய மேவ ஜெயதே என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார், இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு தம் கருத்துகள் தெரிவித்தனர். இதனால் மக்களும் பயனடைந்தனர்.

அமீர்கான் தன் சமீபத்திய படங்களில்,  இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்திருந்தாகவும் அதைக் காரணம்காட்டி, லால்சிங் சத்தா படத்தையும், இந்த boycott போர்டை காட்டி நிராகரித்தனர்.

ரூ. 400கோடி பட்ஜெட்டில் எடுத்த இப்படம் ரூ.14 கோடிதான் வசூல் ஈட்டி படுமோசமான தோல்வி அடைந்துள்ளது.

கடந்த, 2020 ஆம் ஆண்டு, சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசுகள் தான் காரணம் என ஒரு புகார் எழுந்தது. இதையே, கங்கனா ரனாவத் வீடியோவாக வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதனாலும் சல்மான் மீது ஒரு சில மாதங்களுக்கு முன்  ரசிகர்கள் சல்மான் மீது வெறுப்பில் இருந்தனர். அவர் நடத்தி வரும் being human   நிறுவனத்தின் பெயரைச் சுட்டிக்காடி, இவர் தான் மானை வேட்டையாடியதாகவும் வசைபாடினர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சில மாதங்களுக்கு முன் ஒரு ரவுடி கொலைமிரட்டலும் விடுத்திருந்தார், இதனால் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் கேட்டு போலிஸிடம் விண்ணப்பித்திருந்தார் சல்மான் கான்.

இதொருபுறம் இருக்க, ஷாருக்கானின் மகன் ஆர்யன் சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் கைதாகிச் சிறையில் இருந்து சில மாதங்கள் கழித்து, அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் ராஜாவாக கோலோட்சிக் கொண்டிருந்த நடிகர்களின் பெயர்கள் இந்தக் காரணங்காளால் ரசிர்களின் வெறுப்புக்கு ஆளாகி அது, அவர்களின் படங்களைப் புறக்கணிக்குமளவு, சாபத்தில் முடிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மாங்கூட பாலிவுட்டில் தனக்கு எதிராகச் சிலர் சதி செய்வதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரு சிலரின் ராஜ்ஜியம் நடப்பது உண்மைதான். அதற்காக எல்லோரையும் குறைகூறமுடியாது.

இன்று பாலிவுட் கான் கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போலவும், தென்னிந்திய நடிகர்களான ஜூனியர் என்டி ஆர், ராம்சரண் போன்றோர் கடவுகளை மரியாதை செய்வதுபோலவும் போஸ்டர் கிரியேட் செய்து, மீம்ஸ்கள் பரப்பினர்.

தென்னிந்திய நடிகர்களின் படங்களில் லைகர் படத்திற்கு மட்டுமே boycott செய்வதாக சமீபத்தில் டிரெண்டிங் செய்தனர். அது, விஜய் தேவரகொண்டாவில் செயலுக்கு என ரசிகர்கள், அப்படத்தின் டீசர் வெளியீட்டி அவர் நடந்து கொண்ட முறை தவறு என்பதுபோல் குறிப்பிட்டிருந்தனர்.

மற்றபடி, கலையை கலையாகப் பார்ப்போமானல் அங்கு வெறுப்பிற்கும், புறக்கணித்தலுக்கும் இடமில்லை.

 3 கான் படங்களுக்கு மட்டும் தோல்வியில்லை,கங்கனாவின் சமீபத்திய படம் பெரும் தோல்வி அடைந்தது. ஆலியா பட்டின் படங்கள் தோற்ற போதிலும் சமீபத்தில் படங்கள் வெற்றி பெற்று அவர்  நம்பர் 1 ஹீரோயினாக பாலிவுட்டில் உள்ளார். அவர் பாய்காட் செய்தாலும் பரவாயில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றாலும் கவலையில்லை; என் படங்களைப் பார்க்காவிட்டாலும் சரி. என் சிறந்த உழைப்பையும் திறமையையும் அதில் கொடுக்கிறேன் அது எனக்குப் பிடித்த தொழில் என்று தெரிவித்தார்,அதேபோல், சமீபத்தில் ஒரு இயக்குனர் பேசும்போது, ஒரு பேட்டியில், ஒரு படத்தின் கன்டென்ட், ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால், அப்படங்கள் தோற்காது,  நெட்டிசன் கள் பாய்காட் என்று ஹேஸ்டேக் போடுவதால் ஒன்றும் படங்கள் தோற்பதில்லை என்று விளக்கம் அளித்தார். அதற்கேற்ப இன்று விக்ரம் வேதா இந்தி ரீமேக் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது,.  சயீப் - ஹிருத்திக்கின் மற்ற படங்கள் போல் இப்படம் பெரும் வெற்றி பெரும் என வாழ்த்தினர்.

அதேசமயம் ரசிகர்கள் எல்லா ஸ்டார்களின் படங்களையும் இப்படி பாய்கட் சொல்வதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். எனவே படங்கள் வெளியீடு செய்யும்போது மட்டும் ரசிகர்களை ரசிகர்களை நினைப்பதும் அவர்களைத் தேடிச் செல்வதுமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் ரசிகர்களினாலும் இந்த தேசத்தில் இருப்பதால் தான் தன் கலை ஜீவனத்திற்கும் தொழிலுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை  நினைத்துக் கொண்டால், அவர்கள் யாரையும் அவமதிக்கவும் தோன்றாது. அவர்களையும் ரசிகர்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்