முதலிரவு சமாச்சாரம் பேசும் "முருங்கக்காய்"... பட்டைய கிளப்பியும் பர்ஸ்ட் லுக்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (13:31 IST)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பெண் ரசிகைகளை அதிகம் பெற்றவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவரது கேரியரில் சிறந்த படமாக அமைந்தது. தொடர்ந்து சந்தானத்துடன் சேர்ந்து காமெடி செய்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்நிலையில் தற்ப்போது ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் "முருங்கக்காய்" என்ற படத்தில்  பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவு சமாசாரத்தை காமெடியாக கூறும் இப்படத்தின் போஸ்டரில் நடிகர் பவர் ஸ்டார் மல்லிகை பூவை உடலில் சுற்றிக்கொண்டு முதலிரவு அறையில் மிகுந்த ஆர்வத்துடன் பெட்டில் படுத்துக்கொண்டிருக்கிறார். பால் சொம்பு கீழே உருள... உள்ளாடை கழண்டு கிடக்கிறது. காமெடி அம்சங்கள் பல நிறைந்திருக்கும் இந்த படம் நிச்சயம் வித்யாசமான இருக்கும் என ரசிகர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்