அழைப்பிதழ்களுடன் அப்டேட் கொடுத்த விக்ரமின் "கோப்ரா" டீம்!

சனி, 27 ஜூன் 2020 (10:06 IST)
விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட அட்டகாசமான போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில்  20 விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறாராம்.

இந்நிலையில் கோப்ரா படக்குழு சியான் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஆம், "தும்பி துள்ளல்" என்ற முதல் பாடல் வரும் ஜூன் 29ம் தேதி திங்கள் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர் . இந்த அப்டேட்டை சற்று வித்யாசமாக, விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கியூட்டான கார்டூன் போஸ்டருடன் அழைப்பிதழ்களையும் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

A virtual musical celebration like never before!
An open invite to all music & movie lovers right at ur homes!#CobraFirstSingle-#ThumbiThullal from Monday 5pm #ChiyaanVikram's #Cobra @AjayGnanamuthu @arrahman @SrinidhiShetty7 @SonyMusicSouth @JioSaavn @proyuvraaj pic.twitter.com/9GYK4MFS3C

— Seven Screen Studio (@7screenstudio) June 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்