டிடியை கலாய்த்து பல்பு வாங்கிய ஆர்யா!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (13:19 IST)
டிடி என அழைக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர். இவர் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்தார்.


 
 
இந்த நிகழ்ச்சி தற்போது பெயர் மாற்றப்பட்டு அன்புடன் டிடி என்ற பெயருடன் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளம்பரங்களும் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
அந்த விளம்பரத்தை டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை கம்மெண்ட் செய்ய நடிகர் ஆர்யா அதில், டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், அன்புடன் ஆர்யா என கிண்டலாக கம்மெண்ட் செய்தார்.


 


இதற்கு பதில் அளித்த டிடி ஆர்யாவை கிண்டல் செய்வது போல, ஜி ஜி இது உச்சக்கட்டம் ஜி... நீங்க பார்த்து தேதி தந்தீங்கனா நான் வாழ்வேன் ஜி. நீ இப்ப காட்டுல இருக்கியா இல்ல வீட்டுல இருக்கியா கடம்பா என கூறினார்.
அடுத்த கட்டுரையில்