சிக்கித் தவிக்கும் ‘சிவ’ நடிகர்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (14:59 IST)
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குப் போனவர் இந்த ‘சிவ’ நடிகர். குழந்தைகளை வைத்துப் படமெடுத்து ‘தேசிய  விருது’ பெற்ற இயக்குநர்தான் நடிகரை முதன்முதலாக சினிமாவுக்கு அழைத்துப் போனவர். இயக்குநரின் அடுத்த படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.

 
 
அதன்பிறகுதான் நடிகரின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது. இதனால், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, குருபக்தியை செருப்புக் காலால் மிதித்து சிதறடித்தார். அதன்பிறகு அவர் நடித்த  படங்களின் தயாரிப்பாளர்களையும் கதறவிட்ட கதையை நாடே அறியும். 
 
இதனால், தற்போது ‘சிவ’ நடிகரின் படங்களைத் தயாரித்து வரும் நேரத்தை கம்பெனி பெயரில் வைத்திருக்கும் தயாரிப்பாளர்  படு உஷாராக இருக்கிறாராம். மற்றவர்களைப் போல தனக்கும் கம்பி நீட்டி விடுவாரோ என்று பயந்த தயாரிப்பாளர், ‘சிவ’  நடிகர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஜிம் பாய்ஸ்களை கூடவே அனுப்புகிறாராம். ‘உங்களின் பாதுகாப்புக்காகத்தான்’ என ‘சிவ’ நடிகரிடம் சொல்லி வைத்திருக்கும் தயாரிப்பாளர், தன்னைக் கேட்காமல் நடிகரை யாரும் சந்திக்கக் கூடாது என  உத்தரவு போட்டுள்ளாராம். இதனால், அடுத்த புளியங்கொம்பைப் பிடிக்க முடியாமல் சிக்கித் தவிக்கிறாராம் ‘சிவ’ நடிகர்.
அடுத்த கட்டுரையில்