வில்லி வேடங்களில் மார்க்கெட் இழந்த நடிகைகள்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (16:01 IST)
மார்க்கெட் இழந்த முன்னாள், இந்நாள் ஹீரோயின்கள், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்களாம்.


 

இடுப்புக்குப் புகழ்பெற்றவர் அந்த உயர நடிகை. கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர், கல்யாணம், குழந்தை என்றானபிறகு, ஆன்ட்டி வேடத்தில் தலைகாட்டி வருகிறார். சோலோ ஹீரோயினாக நடித்தும் பலன் இல்லாததால், வில்லியாக நடிக்க இருக்கிறார். சிவ நடிகரும், இயக்குநரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தில், சிவ நடிகருக்கு வில்லியாக நடிக்கிறாராம்.

இதேபோல், நடிக்கவே தெரியாத பப்ளி நடிகையும் வில்லியாக நடிக்கிறார் என்கிறார்கள். நடிக்கத் தெரியாமல் சில வருடங்களாக வெள்ளைத்தோலை மட்டுமே வைத்து வாய்ப்புகளைக் கைப்பற்றி வந்தார் பப்ளி. ஆனால், நம்மவர்களுக்கு வெள்ளைத்தோல் போரடித்துவிட, நடிகைக்கு வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர், தான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லி வேடம் கொடுத்திருக்கிறாராம்.

அடுத்த கட்டுரையில்