தன்னுடைய காதலை ஒரு நடிகை ஏற்கவில்லை என்பதற்காக கன்னட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ஹூச்சா வெங்கட், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் ஜோடி 2ம் பாகத்தில் ஹூச்சா வெங்கட் பங்கேற்றார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் நடிகை ரச்சனா. அந்த நிகழ்ச்சிக்கு பின், ஹூச்சா வெங்கட, ரச்சனாவை காதலித்துள்ளார். ஆனால், அவரின் காதலை ரச்சனா ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
இதனால் மனமுடைந்த வெங்கட், நேற்று தனது பண்ணை வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரை எப்போது நான் காதலித்தது இல்லை நடிகை ரச்சனா விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007ம் ஆண்டு ரேஷ்மா என்ற பெண்ணை ஹூச்சா வெங்கட் ஏற்கனவே திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.