வம்பு நடிகருக்கு கண்டிஷன் போட்ட இயக்குநர்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (18:37 IST)
சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிட வேண்டும் என்று வம்பு நடிகருக்கு இயக்குநர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.


 

 
வம்பு நடிகரை வைத்துப் படமெடுப்பது என்பது, வேலியில் போற ஓணானைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக் கொள்வதற்கு சமம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சிலர் இதை முன்கூட்டியே தெரிந்து விலகிவிடுகிறார்கள்; சிலர் அதையும் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று இறங்கி, பிறகு அவஸ்தைப்படுவார்கள். அப்படியொரு அவஸ்தைக்குத் தயாராகியுள்ளார் பெல் இயக்குநர்.
 
அவர் இயக்கப் போகும் படத்தில், ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். அதில், வம்பு நடிகரும் ஒருவர். அவரைப் பற்றித் தெரிந்த பிறகும் பெல் இயக்குநர் எப்படி படத்தில் நடிக்க அழைத்தார்? அழைக்கும்போதே சரியான நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.

அப்படி வரவில்லை என்றால், வம்புவுக்குப் பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைத்துவிடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். தற்போது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வம்பு, கண்டிஷனுக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்