துல்கர் சல்மான் படத்தின் தலைப்பான வைரமுத்து வார்த்தைகள்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (18:30 IST)
வைரமுத்து எழுதிய பாடல் வார்த்தைகள், துல்கர் சல்மான் நடிக்கும் படத்துக்குத் தலைப்பாக மாறியுள்ளது.


 

 
விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த தேசிங்கு பெரியசாமி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அவர் நடிக்கும் நான்காவது தமிழ்ப் படம் இது. ‘துருவ நட்சத்திரம்’ மூலம் தமிழில் அறிமுகமாகும் ரிது வர்மா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய பாடலின் முதல் வரி இது. மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ படத்துக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்