சம்பளம் வாங்காமல் நடிக்கும் இரண்டெழுத்து நடிகர்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:46 IST)
தன்னை வைத்து யாரும் படம் எடுக்க முன்வராததால், தன்னுடைய நண்பர் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறாராம் இரண்டெழுத்து நடிகர்.


 


புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம் என்றொரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டிருக்கும் இந்த இரண்டெழுத்து நடிகருக்கு நன்றாகப் பொருந்தும்.

தன்னை ‘சின்ன தல’யாகவே நினைத்துக் கொள்ளும் இவர், தான் நடிக்கும் எந்தப் படத்தின் புரமோஷனுக்கும் வருவதில்லை. எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. அத்துடன், ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது, கால்ஷீட்டில் சொதப்புவது என எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.
இதனால், இவரை வைத்துப் படமெடுக்க எல்லோரும் தயங்குகிறார்கள். ஒன்றிரண்டு படங்கள் மட்டும்தான் கையில் இருக்கின்றன. அதுவும், இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். எனவேதான், தன் நண்பரின் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்