இயக்குநரை வறுத்தெடுத்த வைகைப்புயல்

வெள்ளி, 27 அக்டோபர் 2017 (13:44 IST)
தன்னை ஊறுகாய் போல பயன்படுத்திக் கொண்டதால், இயக்குநரை வறுத்து எடுத்துவிட்டாராம் வைகைப்புயல்.





தளபதி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் இது. சர்ச்சைகளில் சிக்கிய இந்தப் படத்தில், ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதில், வைகைப்புயலும் ஒருவர். தளபதியைத் தவிர எல்லா நடிகர்களுமே ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளைப் போல ஒருசில காட்சிகளில்தான் வந்து போயிருக்கின்றனர்.

ஆனால், எல்லாருக்குமே ஏகப்பட்ட ஸீன்களை எடுத்தாராம் இயக்குநர். அவை எல்லாமே எடிட்டிங்கில் வெட்டி எறியப்பட்டுவிட்டதாம். படத்தைப் பார்த்த வைகைப்புயல், இயக்குநருக்கு போனைப் போட்டு வறுத்து எடுத்துவிட்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்