பிரமாண்ட சரித்திரப் படத்தில் தேவசேனாவாக நடித்தவர் இந்த நடிகை. ஒரு படத்துக்காக வெயிட் போட்டுவிட்டு, அதைக் குறைக்க முடியாமல் சில வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும், அவரை வைத்துப் படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகின்றனர்.
அதுவும் பிரமாண்ட படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எல்லாமே கமர்ஷியல் கதைகளாகத்தான் வருகிறதாம். அதனால், எந்த வாய்ப்புகளையுமே நடிகை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ‘நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்’ என்ற கண்டிஷனில் இருந்து கீழே இறங்க மாட்டேன் என்கிறாராம்.