ஒன்னுக்கு இன்னொன்னு சளைச்சதில்ல..! POCO F4 vs POCO F5! – எது பெஸ்ட்?

Webdunia
புதன், 10 மே 2023 (11:21 IST)
ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் POCO சமீபத்தில் தனது புதிய POCO F5 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. POCO F4 vs POCO F5 இதில் எது பெஸ்ட் என பார்க்கலாம்.

இந்தியாவில் 5ஜி அறிமுகத்திற்கு பிறகு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பல புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் பிரபலமான போக்கோ நிறுவனம் தனது POCO F5 Pro ஸ்மார்ட்போனை மே 9ம் தேதி உலக அளவில் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய POCO F5 5ஜி ஸ்மார்ட்போன் போக்கோவின் முந்தைய மாடலான POCO F4 5ஜி யுடன் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது. POCO F4 ஸ்னாப்ட்ராகன் 870 சிப்செட்டை கொண்டுள்ளது. POCO F5 மாடல் ஸ்னாட்ராகன் 7+ ஜென் 2 லேட்டஸ்ட் சிப்செட்டை கொண்டுள்ளது.

POCO F4 ஸ்மார்ட்போன் 6 ஜிபி / 8 ஜிபி / 12 ஜிபி வேரியண்ட் ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட 3 மாடல்களாக கிடைக்கிறது. POCO F5 ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி ஆகிய 2 மாடல்களில் கிடைக்கிறது.



ஆனால் POCO F4 ஐ விட POCO F5 ல் கேமரா வசதிகள் அட்டகாசமாக உள்ளது. POCO F4 ல் 64 எம்பி + 8 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் பேக் கேமரா உள்ளது. இதோடு HDR, Panaroma, Skyscraping உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 20 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

POCO F5 ல் பேக் கேமரா 64 எம்பி + 8 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் பேக் கேமராவாக இருந்தாலும், அது கூடவே AI Art Framing, Timelapse, Movie Frame, Long Exoposure, Macro Mode உள்ளிட்ட பல்வேறு கூடுதல் அம்சங்களும் உள்ளன. இதன் முன்பக்க கேமரா 16 எம்பி ஆக உள்ளது.

POCO F4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் அட்ரினோ 650 ஜிபியுவில் இயங்குகிறது. POCO F5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 லேட்டஸ்ட் ஓஎஸ் அட்ரினோ 725ல் இயங்குகிறது.

POCO F5 மாடல் 5000 mAh பேட்டரி 67W Soinic Charge வசதியுடனும், POCO F4 மாடல் 4500 mAh பேட்டரி 67W Turbo Charge வசதியுடனும் உள்ளது.

POCO F5 அடிப்படை அம்சங்களுடனான (8 ஜிபி + 256 ஜிபி) மாடல் விலை ரூ.29,999 ஆக உள்ளது. POCO F4 மாடல் தொடக்க விலை (6 ஜிபி + 128 ஜிபி) விலை ரூ.27,999 ஆக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்