கூகுள் மேப்பில் இறந்த தாத்தாவைப் பார்த்த நபர் – இதல்லவா டெக்னாலஜி !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (16:17 IST)
கூகுள் மேப்பின் மூலம் கடந்த காலத்துக்கு சென்று தனது தாத்தாவை ஒரு பெண் பார்த்து வியந்ததை சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கூகுள் மேப்பின் வசதியைக் கொண்டு எதிர்காலத்தில் ஒரு இடத்தையோ அல்லது ஒரு இடத்திற்கு செல்லும் பாதையோ நாம் காணமுடியும் வளர்ந்த நாடுகளில் இந்த வசதியானது கிட்டதட்ட நிஜ வீடியோ போலவே வீதிகளையும் வீடுகளையும் காட்டும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக வைத்து சேர்ந்த பெண் ஒருவர் தனது இறந்து போன தாத்தாவை பார்த்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது பதிவில் ’என் தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். அப்போது நான் அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை. எதிர்பாராதவிதமாக நான் கூகுள் மேப்பில் அவரது பண்ணை வீட்டிற்கு பார்த்துக் கொண்டிருந்தபோது, வீட்டை நெருங்கிய போது வீட்டு வாசலில் எனது தாத்தா அமைந்திருக்கும் புகைப்படம் தோன்றியது’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்