பாதுகாப்பு தொடர்பாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:58 IST)
மொபைல் போனில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


 

 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்மார்ட்போன் விற்பனையும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன்கள், மைக்ரோமேக்ஸ், ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மொபைகள் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகிறது.
 
ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளரின் தகவல் மற்றும் மொபைலில் சேமிக்கப்படும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதனை மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான Vivo, Oppo, Xiaomi மற்றும் Gionee  ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும் சீன நிறுவனங்கள் இல்லாமல் Apple, Samsung, Motorola, Micromax உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்