இரண்டு ஆண்டுகளில் 5ஜி சேவை தொடக்கம்! – ஏர்டெல் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (11:28 IST)
இணையவேகத்தில் அடுத்தகட்டமாக 5ஜி சேவையை இரண்டு ஆண்டுகளில் தொடங்குவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் செல்போன் நெட்வொர்க் சேவையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் தற்போது 4ஜி சேவை புழக்கத்தில் உள்ள நிலையில் அதிவேக 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றன.

இந்தியாவில் தற்போது அதிநவீன 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட செல்போன்களும் அறிமுகமாக தொடங்கியுள்ளன. இந்நிலையில் அடுத்த 2024ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்