ஏர்டெலில் நெட்வொர்க் தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் தவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் மட்டும் பிரீபெய்டு கட்டணங்களை வெகுவாக உயர்த்திய நிலையில் இந்த ஆண்டும் தொலைதொடர்பு சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் நான்கு மாதங்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் பிரிபெய்டு கட்டணம் உயரும் என ஏர்டெல் அறிவித்திருப்பது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் தவித்தனர்.
இதன் பின்னர் ஏர்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்ப கோளாறை சரி செய்தது. இந்தியாவில் முக்கியமான நெட்வொர்க் ஆக இருந்து வரும் ஏர்டெல் விலையை உயர்த்துவதில் ஆர்வம் காட்டும் நிலையில் இம்மாதிரியான இன்னல்களையும் தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.