தீபக் சஹாரின் ஒரே ஓவரில் 21 ரன்கள்: தவான் அதிரடி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (21:48 IST)
தீபக் சஹாரின் ஒரே ஓவரில் டெல்லி அணியின் தவான் 21 ரன்கள் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது 
 
இந்தநிலையில் 137 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா விக்கெட்டை இழந்த போதிலும் தவான் அதிரடியாக விளையாடி வருகிறார் 
 
ஐந்தாவது ஓவரை வீச வந்த தீபக் சஹாரின் ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் மற்றுமொரு சிங்கிள் என 21 ரன்கள் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் வரை டெல்லி அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்