பெங்களூரை வீழ்த்திய பஞ்சாபின் வெற்றியை பாராட்டும் மேக்ஸ்வெல்!

Webdunia
சனி, 6 மே 2017 (13:08 IST)
நேற்று இரவு பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் 43-வது ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 14 ரன்  வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தியது.

 
முதலில் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பெங்களூர்  19 ஓவரில் 119 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. சந்தீப்சர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் பெற்ற  5-வது வெற்றியாகும். இதனால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
 
பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.  அக்‌ஷர் பட்டேல் கடைசி கட்டத்தில் ரன் குவித்து நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக  செயல்பட்டதோடு, சந்தீப்சர்மா அற்புதமாக பந்துவீசினார்கள். குறிப்பாக விராட்கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ்  ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றியதுதான். நாங்கள் இன்னும் வலுவான ஆட்டத்தை வெளிபடுத்த விரும்புகிறோம் என்று  கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்