டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு – மேலும் ஒரு வீரர் காயம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (10:10 IST)
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியில் காயமடைந்ததால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றது. நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்யும் போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை தடுக்க முயன்ற போது இடது தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை தெரியாததால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே காயம் காரணமாக அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தினால் தொடரை விட்டே வெளியேற, ரிஷப் பண்ட் காயத்தால் ஓய்வில் உள்ளார். இப்போது ஸ்ரேயாஸும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்