சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (13:52 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய வீராங்கனைகள் இருவர் சதம் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை அடுத்து வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் சதமடித்தனர். வர்மா 149 ரன்களுடன் விளையாடி வரும் நிலையில் மந்தனாவும் 149 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  இந்நிலையில் தற்போது சதீஷ்  சுபா களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சற்றுமுன் வரை இந்திய மகளிர் அணி 55 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியை பார்க்க கட்டணம் எதுவும் இல்லை அல்லாமல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்