அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

vinoth

வெள்ளி, 28 ஜூன் 2024 (11:18 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்களை இழந்தது. இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு மிக எளிதாக சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகிறார். இதனால் இறுதி போட்டியிலாவது அவரைத் தூக்கிவிட்டு சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வாருங்கள் என ரோஹித் ஷர்மாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்