9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே: பஞ்சாப் அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:13 IST)
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் களத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ருத்ராஜ் கெய்க்வாட் இன்றும் அரைசதம் அடித்தார் என்பதும், அவர் 62 ரன்கள் எடுத்தார் என்பதும் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார் என்பதும் மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்