ஆம், நாங்கள் வெற்றி பெற தகுதியற்றவர்கள்தான்: சீறும் கோலி!

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:41 IST)
பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் மோதின. 175 ரன்கள் எடுத்த கோலி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. 
 
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் கோலி பின்வருமாறு பேசினார், ஒவ்வொரு முறை பிட்ச் எங்களுக்கு சில ஆச்சரியங்களை தருகிறது. 175 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். ஆனாலும் திரும்பிப்பார்க்கையில் நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் அல்ல. 
 
எங்கள் மீது நாங்களே கடுமையாக இருக்க வேண்டியுள்ளது. கடினமாக முயற்சி செய்யவில்லை. நாங்கள் 11 பேரும் ஒன்றிணைந்து களத்தில் உத்வேகத்தைக் கொண்டு வர வேண்டும். 
இப்படி எல்லாம் பீல்டிங் செய்தால் நாங்கள் வெற்றி பெற தகுதியற்றவர்கள்தான். சிங்கிள்களெல்லாம் பவுண்டரியாகும் விதத்தில் பீல்டிங் செய்தால் நாங்கள் எப்படி வெற்றி பெற முடியும்? 
 
இனி வரும் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றால்தான் தகுதி பெற முடியும். இனி ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதிதான் என கூறியுள்ளார். 
 
டெல்லி தொடர் தோல்விகளை சந்தித்த போது கம்பீர் கேப்டன் பதவியை துறந்தார். ரோகித் சர்மா வெற்றிக்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார். ஆனால் கோலியிடம் உத்வேகம் குறைவாக இருப்பதாக தெரிகிறது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்