500 மில்லியன் டாலர் சம்பாதித்து கொடுத்த ‘பிளாக் விடோ’

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:39 IST)
500 மில்லியன் டாலர் சம்பாதித்து கொடுத்த ‘பிளாக் விடோ’
ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடித்த மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த திரைப்படம் பிளாக் விடோ. கடந்த ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை என்பதால் இந்தியாவில் இந்த படம் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பிளாக் விடோ வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும் 375 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாகவும் டிஸ்னி ஹாட் ஸ்டார் இந்த படத்தை 125 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி உள்ளதாகவும் ஏற்கனவே இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 மில்லியன் வசூல் செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்