வடிவேலுவின் அடுத்த படம் ஓடிடியில்தான் ரிலீஸ் ஆகும்! முன்னணி தளம் ஒப்பந்தம்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:59 IST)
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான தலைநகரம் படத்தில் வடிவேலு நாய்சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதற்குக் காரணம் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளும் முக்கியக் காரணியாக அமைந்தன. அதிலும் அவர் ஏற்றிருந்த நாய் சேகர் கதாபாத்திரம் அவரின் அடையாளங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது வடிவேலுவின் திரை வாழ்க்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சுராஜ் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்திலும் வடிவேலுவே நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஜி 5 ஓடிடி தளம் தயாரிப்பில் அந்த தளத்தில் வெளியாகும் என்பது மட்டும் உறுதியாகிவிட்ட நிலையில், படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்