சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதல் முறையாக மாலை போட்டு செல்லும் பக்தர்கள் கன்னி பக்தர்கள் என்று அழைக்கப்படுவது ஒன்று. மேலும் அவர்கள் கன்னி பூஜை செய்வது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் கன்னி பூஜை என்பது மிகவும் முக்கியமானது என்றும் ஆனால் அதே நேரத்தில் கன்னி பூஜை செய்பவர்கள் தங்களுக்கு இருக்கும் இடவசதி மற்றும் பண வசதிக்கு ஏற்ப செய்து கொள்ள வேண்டும் என்றும் கன்னி பூஜை பிரமாண்டமாக நடத்துவதற்காக கடன் வாங்க கூடாது என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
உங்கள் வசதிக்கு ஏற்றால் போல் கன்னி பூஜை செய்தால் போதும் என்றும் வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி கன்னி பூஜை செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார் என்றும் உளமார்ந்த பக்தியை மட்டும் தான் அய்யப்பன் விரும்புவார் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் கன்னி பூஜை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் ஒரு பழம், ஒரு பூ ஆகியவற்றை அய்யப்பனுக்கு படைத்தால் கூட அவர் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.