நாம் செய்த பாவங்களை நீக்கும் காமிகா ஏகாதசி விரதம் !!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:24 IST)
காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணிய த்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத் தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்த மாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார்.


நம்மையறியாமல் நாம் செய்த பாவங்கள் நீங்க வழிவகை தேடியலைகிறோம். அப்படி அலையும் மனிதர்களுக்காக நம் முன்னோர்கள் கண்டு சொன்ன உபாயமே விரத நாள்கள். ஆதிகேசவ பெருமாள் விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதம். இதன் மகிமையை புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன.

காமிகா ஏகாதசி: ஏகாதசி என்றாலே அது பெருமாளைப் போற்றும் நாள். அதிலும் காமிகா ஏகாதசி, பெருமாளின் நாமங்களை ஜபம் செய்து போற்ற வேண்டிய தினம். இந்தத் தினத்தின் மகிமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் சொல்கிறது. யார் காமிகா ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்த யாகமான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவார்கள் என்று சொல்கிறது.

இத்தனை சிறப்பித்துச் சொல்லப்படும் காமிகா ஏகாதசியின் சிறப்புகளை பிரம்மன் தன் புதல்வரான நாரதருக்குச் சொல்வதாக அமைகிறது. காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார்.

பூமி தானம் என்பது மிகவும் உயர்ந்த தானமாகப் போற்றப்படுகிறது. நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்