பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனிபகவானே ஆவார்.
சனிபகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிபகவானானவர் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதத்தை மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்கள். இவ்விரதத்தை மேற்கொள்வதால் தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானம் மேலும் தொழில் விருத்தியும் உண்டாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.