பாசிப்பயறு மாவை பயன்படுத்தி முகத்தை பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...!!

Webdunia
பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுகின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல க்ரீம்களை தேடி அலைகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் உடலைப் பராமரித்து வந்தார்கள். 

மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு  பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 
 
1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2  ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை  தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.
 
சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற  வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.
 
1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ  வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம். 
 
சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்