தலைமுடி பராமரிப்பில் பயன்படும் இஞ்சி...!!

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.


இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும்  பயன்படுத்த முடியும். அதாவது இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். 
 
தலை முடியில் ஏற்படும் பிரச்னைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.
 
இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் அதிகமுள்ளதனால் செரிமான கோளாறு, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்த முடியும். அத்தோடு இஞ்சி வலி  நிவாரணியாகவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இஞ்சி, உடலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கிறது.
 
இஞ்சியில் இரத்த ஓட்டத்தை தூண்டும் பண்புகள் உள்ளன. இதனால் வேர்களுக்கு போதிய இரத்த ஓட்டமும், போஷாக்கும் கிடைகின்றது. 
 
இது நல்ல ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை தூண்டுகின்றது. மேலும் இது மிதமான உஷ்ணத்தை தடவிய இடத்தில் உண்டாக்குவதால், அந்த இடம்  தூண்டப்பட்டு விரைவாக சத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மையையும் பெறுகின்றது.
 
இஞ்சியில் அதிக ஆக்சிஜனேற்றம் இருப்பதால், ப்ரீ ராடிகல்ஸ்கலை எதிர்க்கும் பண்புகள் கொண்டிருகின்றது. இதனால் உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்ச்களை போக்க உதவுகின்றது. இதனால் முடி உதிர்வு குறைகின்றது.

தேவையான பொருட்கள்: இஞ்சி, செய்முறை: தேவையான இஞ்சியை எடுத்து அம்மியில் வைத்தோ, அல்லது மிசியில் போட்டு நன்கு அரைத்து சாறு எடுத்துக்  கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சாறு எடுத்துக் கொள்வது நல்லது.
 
இந்த சாற்றை தலைமுடி வேர்களில் நன்கு தேக்க வேண்டும். சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை முடியை  அலசி விட வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தலைமுடியும் விரைவாக நல்ல வளர்ச்சிப் பெரும்.  நல்ல அடர்ந்த தலைமுடியை நீங்கள் சில நாட்களில் வளருவதை காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்