எண்ணெய் பசை சருமத்திற்கு முல்தானி மெட்டி !!

Webdunia
முல்தானி மெட்டி குறித்து நம்மில் பலரும் கேள்வி பட்டிருப்போம். முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலருடைய விருப்ப தேர்வாக முல்தானி மெட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சருமத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை உள்ளவர்களுக்கு முல்தானி மெட்டி சரியான ஒரு தீர்வு. முல்தானி மெட்டியை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள துளைகளையும் அழுக்குகளையும் நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி எண்ணெய் வடியும் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி  வைக்கிறது.
 
முல்தானி மெட்டியை தண்ணீரில் குழைத்தோ அல்லது சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் கலந்தோ முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம். வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்து வரும்போது முகத்தில் உள்ள எண்ணெய்பசை வடியும் பிரச்சனை குறையும்.
 
முகத்தில் பருக்களால் ஏற்படும் தழும்புகள் மற்றும் வடுக்களை நீக்கும் தன்மை முல்தானி மெட்டிக்கு உண்டு. எனவே, முகம் முழுக்கவோ அல்லது பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் இருக்கும் இடத்திலோ முல்தானி மெட்டியை அடிக்கடி வைக்கும் போது அதற்கான பலனை எதிர்ப்பார்க்கலாம்.
 
முல்தானி மெட்டி பொடியை தயிருடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல பயன்படுத்தலாம் இல்லையெனில் முல்தானி மெட்டியுடன் புதினா பொடியை கலந்து  பயன்படுத்தும் போது சருமத்திற்கு நல்ல பொலிவை தரும்.
 
முல்தானி மெட்டி கருவளையத்திற்கும் நல்ல ஒரு தீர்வாக பயன்படுகிறது. முல்தானி மெட்டியுடன் உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அடியில் தடவி வரும் போது கருவளையம் விரைவில் மறைந்து பளிச் சருமத்தை தரும்.
 
முல்தானி மெட்டியுடன் முட்டை, நெல்லிக்காய், எலுமிச்சை சாறு இவற்றுடன் பீர் கலந்து தலையில் தடவி இருபது நிமிடம் கழித்து குளித்து வரலாம். இதனால் முடிகள் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருப்பதோடு முடி உதிர்தல் பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்