காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.
முகச் சுருக்கம் நீங்க காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.
முகம் பொலிவு பெற மகிழம் பூ பொடி - 250 கிராம் கிச்சிலி கிழங்கு - 125 கிராம் கஸ்தூரி மஞ்சள் 125 கிராம் கோரைக் கிழங்கு - 150 கிராம் எடுத்து இடித்து அதனுடன் சந்தனத்தூள் - 100 கிராம் சேர்த்து ஒன்றாக கலந்து தினமும் சிறிது எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் முகம் பொலிவு பெறும்.